9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம்

டெல்லி: 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளுக்கு பயிற்சி இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது என விங் கமாண்டர் சோபியா குரேஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: