வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியில் தமிழ் பெண் அதிகாரி

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சீர்காழியை சேர்ந்தவர் மூத்த தூதரக பெண் அதிகாரிஸ்ரீபிரியா ரங்கநாதன். இவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளர் (தூதரகம், பாஸ்போர்ட், விசா, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள்) பதவியில் நேற்று நியமிக்கப்பட்டார். ஸ்ரீபிரியா ரங்கநாதன் 1991ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார். அவர் வெளிநாடுகளில், குறிப்பாக கொரியாவிற்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

Related Stories: