திருவனந்தபுரம்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த கே. கார்த்திக் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஆகும். திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகத்திற்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
