ஒடிசாவில் கூடுதல் தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம் சிக்கியது

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பரங்காவின் கூடுதல் தாசில்தாராக பொறுப்பு வகித்து வருபவர் ஜிதேந்திர குமார் பாண்டா. கியோஞ்சர் மாவட்டம் பாஞ்சோ ஜிபியின் பஞ்சாயத்து செயல் அதிகாரியாக உள்ளவர் ஜிதேந்திர குமார் ஜெனா. இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக ஒடிசா ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வணிக வளாகங்கள், வீடுகள், மனைகள் வாங்கி குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், 100 கிராம் தங்கம், ரூ.34.06 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், கார் உள்ளிட்டவையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், ஜிதேந்திர குமார் பாண்டாவிடம் இருந்து ரூ.73.66 லட்சம் ரொக்கம், 560 கிராம் தங்கம், ரூ.36.97 லட்சம் டெபாசிட்டுக்கான ஆவணம், விலை உயர்ந்த கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: