இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சாரதா துபாயில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அங்கு டிராவல்ஸ் தொழில் செய்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த சிகாமணி (47) என்பவருடன் சாரதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது, சிகாமணி தனது சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சத்தை சாரதாவிடம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி கொடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிகாமணி, சாரதாவை தாக்கி உள்ளார்.
இது குறித்து சாரதா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சாரதா அங்கிருந்து கோவை திரும்பினார். பின்னர், சிகாமணி தன்னை தாக்கியது குறித்தும், வாங்கிய பணத்தை தராததும் குறித்தும் தனது தாயார் மற்றும் தியாகராஜனிடம் தெரிவித்தார். அவர்கள் சிகாமணியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதற்கிடையே, சிகாமணி கோவை வந்து சாரதாவுக்கு வீடு வாங்கி தருவதாக சமாதானம் பேசினார். அதன்படி, கோவை வந்த சிகாமணியை சாரதா உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, துடியலூர் ஆகிய பகுதிகளுக்கு வீடு பார்க்க காரில் அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர், கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் வைத்து மது மற்றும் இறைச்சியில் விஷ மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்தனர். உடலை கார் டிக்கியில் வைத்து கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்தி என்ற பகுதிக்கு கொண்டு சென்று உடலை வீசினர். இந்த கொலை வழக்கில் சரவணம்பட்டி போலீசார் தியாகராஜன் (69), புதியவன்(48), தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி(53), மகள் நிலா(33), உறவினர் சுவாதி (26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சாரதா சரவணம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைதொடர்ந்து கைதான கள்ளக்காதலி சாரதாவின் தந்தையும், தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதியின் கணவருமான சண்முகத்தை சில ஆண்டுகளாக காணவில்லை. அவரின் கதி என்ன? என்பதும் தெரியவில்லை. அவருக்கும் ஏதேனும் அசாம்பாவிதம் நிகழ்ந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை பெற கைதான 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
The post டிராவல்ஸ் அதிபர் கொலையில் திடீர் திருப்பம் கைதான கள்ளக்காதலியின் தந்தைக்கு நேர்ந்த கதி என்ன? 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.
