டெல்லி : சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஏப்ரல் மாதம் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்திருந்தது. கடந்த மாதம் டீசல் தேவை 4% அதிகரித்து 8.23 மில்லியன் டன் நுகர்வு இருந்ததாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த மாதம் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு 3.435 மில்லியன் டன்னாக இருந்தது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.