இந்த உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த போட்டிகளிலும் கொண்டு செல்வோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தற்போது நன்றாக செயல்படுகிறார்கள். தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் இறுதி கட்டத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் நமன்தீர் மற்றும் கார்பின் ஆகியோர் அதிரடியாக ஆடினார்கள். எங்களுக்கு போட்டியில் எப்போது அதிரடி காட்ட வேண்டும் என்று நன்றாக தெரியும். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறப்பானவர்கள்.
ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்பை சிறப்பாக செய்வதன் மூலம் நல்ல அணியை உருவாகும். நான் இன்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர்தான் வீசினேன். நான் பவுலிங் செய்வதற்கான சூழல் ஏற்படவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். ஐபிஎல் தொடர் தற்போது கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த தொடர் சவாலானதாக மாறிவிட்டது. எனவே ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட முயற்சி செய்து வருகின்றோம்’’ என்றார்.
The post எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பானவர்கள்: மும்பை கேப்டன் ஹர்திக் பெருமிதம் appeared first on Dinakaran.
