கோடை விடுமுறைகள் மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தான் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். எப்படி தம் பிள்ளைகளை கோடை விடுமுறையில் கையாள போகிறோம் என்கிற கவலை ஏற்பட்டுள்ளது. பெரும் பாலான பெற்றோர்களுக்கு கோடை விடுமுறைதான் ஆசிரியர்களின் அருமை பெருமைகளை உணர வைக்கிறது.
கோடை விடுமுறைகள் குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கபாபு கூறியது, 90’ஸ் கிட்ஸுகளுக்கு கோடை விடுமுறை என்பது சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு செல்வதும், அங்குள்ள திரையரங்குகளில் திரைப் படங்கள் பார்ப்பதும், தாயக்கட்டைகள், பரமபதங்களை விளையாடுவதுமாக ஒரே கூத்தும் கொண்டாட்டமுமாக தான் இருக்கும். கோடை விடுமுறையில் டைப் ரைட்டிங் கிளாசுக்கு சென்றவர்கள் அநேகர்.
ஆனால், இன்றைக்கு ஆண்ட்ராய்டு செல்தான் உலகமென ஆகிவிட்டது. அது இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கிற மாய வலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை எப்படியாவது சரி செய்து புத்தகங்களை வாசிக்கக்கூடிய பழக்கத்திற்கு பெற்றோர்கள் மாற்ற வேண்டும். மேலும், பிள்ளைகளிடம் பெற்றோர்கள் தங்களின் பாலிய கால நினைவுகளை யும், அவர்களின் கோடை விடுமுறை கொண்டாட்டங் களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
The post லீவு விட்டாச்சு, எட்ற பேட்டை 40 நாட்கள் கோடை விடுமுறை தொடங்கியது கொண்டாட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் appeared first on Dinakaran.
