பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் போப்பிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று இரவு 7 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. மூன்று நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு போப் பிரான்சிஸ் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் ரோம் வருகிறார்கள். போப் விருப்பப்படி மடோனா ஜகானுக்கு அருகில் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் போப் உடல் அடக்கம் செய்யப்படும். இந்த நிலையில், போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் இந்தியா சார்பிலும் இந்திய மக்கள் சார்பாகவும் போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதியுடன் ஒன்றிய அமைச்சர் கிரன் ரிஜிஜு, ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ்வா டி சுசா ஆகியோரும் வாடிகன் புறப்பட்டு சென்றனர்.
The post போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டு சென்றார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!! appeared first on Dinakaran.