கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 4 பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்திய வீரர்கள் பதிலடி! appeared first on Dinakaran.