டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இவர் முன்னாள் பாஜ எம்பி. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கவுதம் கம்பீர், ‘இதை செய்தவர்களுக்கு இந்திய தக்க பதிலடி கொடுக்கும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனக்கு 2 இ-மெயில்களில் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கவுதம் கம்பீர் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், ‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ இருந்து ‘ஐ கில் யூ’ தனக்கு கொலை மிரட்டல் வந்து உள்ளது. தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு கொலை தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஐஎஸ்ஐஎஸ் தீவிராவத அமைப்பு கம்பீருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.