மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகதீஸ்வரன் (15) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும், 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர் சாரதி (17), 9ம் வகுப்பு மாணவர் சாய்சரண் (13) ஆகியோரும் நேற்று கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து, உயிருக்கு போராடிய 3 மாணவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்ததால் கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாய்சரண், சாரதி ஆகிய இருவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். மயக்க நிலையில் உள்ள பிரகதீஸ்வரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post கடலில் மூழ்கிய 3 மாணவர்கள்: பத்திரமாக மீட்ட மீனவர்கள் appeared first on Dinakaran.