இஸ்லாமாபாத் : சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அதனை போராகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், “சிந்து நதி நீரை நிறுத்தினால், எங்களது முழு பலத்தையும் காட்டுவோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.