கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 100-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கலவரத்தின்போது காவல்துறை வாகனத்தை எரித்தது, காவலர்களை தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணையை மே 7ம் தேதிக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதி ரீனா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.