முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

சென்னை: முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை விதித்தது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Related Stories: