சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவையாறு துரை.சந்திரசேகரன்(திமுக) பேசுகையில், திருவையாறு தொகுதி, வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்ய அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், இத்திருக்கோயில் திருப்பணிக்கு சுமார் 1.50 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த கோயிலில் போதிய நிதி இல்லை. 2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரசின் சார்பில் கோயில் திருப்பணிக்காக வழங்கப்படுகின்ற நிதி 6 கோடி ரூபாயை இந்த ஆண்டு முதல்வர் 10 கோடி ரூபாயாக உயர்த்தி கொடுத்து இருக்கின்றார். ஆகவே அந்த நிதியிலிருந்து திருப்பணி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
The post கோயில் திருப்பணிக்கு வழங்கப்படும் நிதி ரூ.10 கோடியாக உயர்வு appeared first on Dinakaran.