இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. அதே நேரத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 22ம் தேதி(நேற்று முன்தினம்) வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.5920 வரை உயர்ந்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்து வந்தனர். இந்த நிலையில் வருகிற 30ம் தேதி அட்சய திருதியை வருகிறது. அட்சயதிரிதியை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது, அட்சய திரிதியை அன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், கூடுதல் செலவையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஏறிய விலையில் தங்கம் விலை தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு பவுன் ரூ.72,120க்கு விற்பனையானது. தங்கம் விலை ஏறிய வேகத்தில், இறங்கியதால் நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
The post ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது appeared first on Dinakaran.