10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் வங்கி கணக்கை இயக்க அனுமதி: ரிசர்வ் வங்கி உத்தரவு


மும்பை: சிறுவர்கள் சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகளைத் திறப்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:எந்தவொரு வயதினரும் தங்கள் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளைத் திறந்து தனியாக இயக்க அனுமதிக்கப்படலாம். அவர்கள் தங்கள் தாயாரை பாதுகாவலராகக் கொண்டு அத்தகைய கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படும்.

10 வயதுக்கு குறையாத மைனர்களுக்கு, வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கும் தொகை மற்றும் விதிமுறைகள் வரை, அவர்கள் விரும்பினால், சேமிப்பு, கால வைப்பு கணக்குகளைத் திறந்து இயக்க அனுமதிக்கப்படலாம். மேலும் அத்தகைய விதிமுறைகள் கணக்கு வைத்திருப்பவருக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், வயது வந்தவுடன், கணக்கு வைத்திருப்பவரின் புதிய இயக்க வழிமுறைகள் மற்றும் மாதிரி கையொப்பத்தைப் பெற்று, பதிவேட்டில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் வங்கி கணக்கை இயக்க அனுமதி: ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: