பெங்களூர்: ஐபிஎல் போட்டியில் இன்று பெங்களூரில் நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் மோத உள்ளன.
* ஐபிஎல் தொடர்களில் இவ்விரு அணிகளும் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் பெங்களூர் 16, ராஜஸ்தான் 14 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.
* எஞ்சிய 3 ஆட்டங்கள் மழை காரணமாக ரத்தாகி விட்டன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 217, பெங்களூர் 200 ரன் விளாசி இருக்கின்றன.
* குறைந்தபட்சமாக பெங்களூர் 70, ராஜஸ்தான் 58 ரன்னில் இன்னிங்சை முடித்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூர் 3லும், ராஜஸ்தான் 2லும் வென்றுள்ளன.
* இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் , பெங்களூர் 3-2 என்ற கணக்கிலும், ராஜஸ்தான் 1-4 என்ற கணக்கிலும் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளன.
* பெங்களூரில் இந்த 2 அணிகளும் மோதிய 10ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 ஆட்டங்களிலும், பெங்களூர் 3 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மீதி 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.
* ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் ஆடிய 8 ஆட்டங்களில் இதுவரையில் 5 ஆட்டங்களில் வென்று உள்ளது.
* சஞ்சு சாம்சன் காயமடைந்துள்ளதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுள்ளார். ராஜஸ்தான் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றியை பார்த்துள்ளது.
* ராஜஸ்தான்-பெங்களூர் அணிகள் ஏற்கனவே ஏப்.13ம் தேதி ஜெய்பூரில் நடந்த 28வது லீக் ஆட்டத்தில் மோதின. அதில் பெங்களூர் 9விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
The post பெங்களூர்-ராஜஸ்தான் இன்று மோதல் appeared first on Dinakaran.