காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் பகல்ஹாம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பகல்ஹாமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கள் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் மட்டும் அல்லாமல் உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது; பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம். இது அனைத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில் இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன. இந்துத்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன. கிறிஸ்தவர்களையும் பவுத்தர்களையும் சுரண்டுகின்றன. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் செய்திதொடர்பாளர்; அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

The post காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: