திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராசிபுரம், ஏப்.22: ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பில், பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பேரூர் செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் பாலசந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், அயலக அணி துணை அமைப்பாளர் முகேஷ், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், நெசவாளர் அணி அமைப்பாளர் தனசேகரன், பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: