பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்

திருச்செங்கோடு, ஜன.7: எலச்சிபாளையம் அருகே, பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். திருச்செங்கோடு அருகே வையப்பம்மலை பகுதியில், தனியார் ெமட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன், நேற்று எலச்சிபாளையம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று, 30 மாணவர்களை அழைத்து கொண்டு வந்தது. ெசலம்பகவுண்டம்பாளையம் அருகே வந்த போது, வேனின் ஸ்பிரிங் பட்டை உடைந்து, சாலையின் வலதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ம் வகுப்பு மாணவர்கள் நிதர்சனா(12), ஹரிகிரூஸ்(12), 9ம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் (14), யுகேஜி மாணவன் தீரன்ஆதித்யா(6), 8ம் வகுப்பு மாணவி ரஸ்மிதா(13), வேன் டிரைவர் ராகுல்கண்ணன்(25) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு, வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: