காஞ்சி சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப். 22: கர்நாடகா பிராமண மகாசபை மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, இனிவரும் காலங்களில் பிராமணர்கள் தனியாக அக்ரகாரங்களை உருவாக்கி தனித்து வாழ வேண்டும். வேதங்களைக் காப்பாற்ற வேண்டும். கிராமங்களை பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஜாதிய கட்டமைப்பை நிலை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் குலம், கோத்திரங்களை பின்பற்ற செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசியுள்ளார். இதை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார். இதில் திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சி சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: