உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் பதிலடி


பீஜிங்: அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். கடந்த 16ம் தேதி சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஒரேயடியாக 245 % உயர்த்தப்பட்டது. அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், அதிலிருந்து விடுபடுவதற்காக, அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. வரி விலக்குகள் பெறுவதற்காக சீனா உடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனாவுக்கு எதிராக செயல்படக் கூடாது என டிரம்புடன் வர்த்தக உடன்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்திவரும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சக செய்திதொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘சீன நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கும் அதன் வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், சீனா அதை ஏற்றுக்கொள்ளாது. அதற்கான எதிர் நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும்.

சீனாவின் நலனை கருத்தில் கொள்ளாமல், அமெரிக்காவுடன் எந்த ஒரு நாடும் ஒப்பந்தம் செய்வதை எதிர்ப்போம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு தக்க எதிர்வினையாற்றப்படும் என்று எச்சரித்துள்ளார்.

The post உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: