சென்னை: அவனியாபுரம் பெரியார் சிலை வரை 4 வழிச் சாலை விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது.வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது தொடர்பாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ தளபதி கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் சந்திப்பு முதல் அவினியாபுரம் பெரியார் சிலை வரை 4 வழிச் சாலையாக அகலப்படுத்த, தெற்கு வாசல் சந்திப்பு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக புதிய மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் 3,500புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 3,500 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் தெரிவித்தார். புதிய பேருந்துகள் வரவர, 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
The post அவனியாபுரம் பெரியார் சிலை வரை 4 வழிச் சாலை விரிவான திட்ட அறிக்கை தயாராகிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.