தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடந்தது.கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலையில் சிலுவைப்பாதையும், முதல் ஞாயிறன்று தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனர்.
6வது வாரம் குருத்தோலை ஞாயிறு நடந்தது. 17ம்தேதி பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பாதம் கழுவுதல் நடந்தது. 18ம்தேதி புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சிலுவை பாதை நடந்தது.
நேற்று முன்தினம் 19ம்தேதி புனித சனியும் இரவில் பாஸ்கா திருப்பலியும் நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுதல் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வட்டார அதிபரும், பங்குத் தந்தையுமான அருட்தந்தை போஸ்கோ குணசீலன் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உலக நன்மைக்காக மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுதல் நடந்தது. மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.ஏற்பாடுகளை வட்டார அதிபரும், பங்குத்தந்தையுமான போஸ்கோ குணசீலன் அடிகளார். உதவி பங்குத்தந்தை மிக்கேல் மகேஷ் செய்திருந்தனர்.
The post ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் appeared first on Dinakaran.