சி.வி.சண்முகம் பேச்சு வெட்கக் கேடானது – குஷ்பு

 

சென்னை: நடிகை நயன்தாரா குறித்த சி.வி.சண்முகம் பேச்சுக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் இஷ்டத்துக்கு பேச நடிகைகள் ஒன்னும் உங்கள் சொத்தோ, உடமைகளோ அல்ல. கீழ்த்தரமான கேலி மற்றும் அற்பத்தனமான பேச்சுக்கு நடிகைகளின் பெயரை பயன்படுத்துவதா? சி.வி.சண்முகத்தின் பேச்சு அவமதிப்பு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கே வெட்கக் கேடானது. பிற தொழில்துறையில் உள்ள பெண்களைப் போலவே நடிகைகளையும் மதிக்க வேண்டும். மரியாதை என்பது எப்போதும் ஒருவழிப்பாதையாக இருக்கும் என நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

Related Stories: