பாஜ கொடியுடன் எம்ஜிஆர் நடனம்: வீடியோ வைரல்

கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நகேந்திரனுக்கு கோவை கோட்ட பாஜ சார்பில் வரவேற்பு அளிக்க கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி துவங்கும் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் வேடமணிந்த கலைஞர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். ரஜினி வேடமணிந்த கலைஞர், பாஜ சின்னம் பொறித்த காவித்துண்டுடன் நடனமாடினார்.

தொடர்ந்து எம்ஜிஆர் வேடமணிந்து, ‘‘கடவுள் எனும் விவசாயி கண்டெடுத்த தொழிலாளி’’ என்ற பாடலுக்கு நடனமாடினார். அப்போது அவர் தனது கையில் பாஜ கொடியை பிடித்து அசைத்தபடி ஆடினார். இதேபோல ‘நாளை நமதே’ என்ற மற்றுமொரு எம்ஜிஆர் பட பாடலுக்கு எம்ஜிஆர் வேடமணிந்தவர் நடனமாடினார். அப்போது காவித்துண்டு அணிந்த பாஜவை சேர்ந்த ஒருவரை அருகில் அழைத்து இருக்கையில் அமர வைப்பது போன்ற காட்சிகளும் நடித்து காட்டப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post பாஜ கொடியுடன் எம்ஜிஆர் நடனம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: