உலகில் முதல் முறையாக அரை மாரத்தானில் ஓடிய மனித உருவ ரோபோக்கள்: சீனா சாதனை


பீஜிங்: உலகில் முதல் முறையாக மனிதர்களுடன் இணைந்து மனித உருவ ரோபோக்கள் பங்கேற்ற அரை மாரத்தான் ஓட்டத்தை நடத்தி சீனா சாதனை படைத்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்த 21 கிமீ அரை மாரத்தான் ஓட்டப் போட்டியில் முதல் முறையாக மனிதர்களுக்கு இணையாக மனித ரோபோக்களும் இடம் பெற்றன. பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் தயாரித்த 21 மனித உருவ ரோபோக்கள் இதில் பங்கேற்றன. இந்த ரோபோக்கள் வெவ்வேறு வடிவங்களுடனும், அளவுகளிலும் இருந்தன. ஒரு சில ரோபோக்கள் ஆரம்பத்திலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றாலும் பெரும்பாலானவை மனிதர்களை போலவே ஓடின. இது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.

ரோபோக்களுக்கான தனி பாதையில் அவைகளின் பேட்டரிகளை மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எத்தியோப்பியா வீரர் எலியாஸ் டெஸ்டா 1 மணி நேரம் 2 நிமிடங்களில் போட்டி தூரத்தை எட்டி முதலிடம் பெற்ற நிலையில், டியான்காங் அணியை சேர்ந்த டியான்காங் அல்ட்ரா ரோபோ 2 மணி நேரம் 40 மணி நேரம் ஓடி வெற்றி பெற்றது. வேகத்திற்காக மட்டுமின்றி, சிறந்த நடை வடிவமைப்பு, புதுமையான வடிவம் போன்ற பல பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் சீனா போட்டி போடும் நிலையில் இந்த ரோபோ மாரத்தான் பந்தயம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

The post உலகில் முதல் முறையாக அரை மாரத்தானில் ஓடிய மனித உருவ ரோபோக்கள்: சீனா சாதனை appeared first on Dinakaran.

Related Stories: