24ம் தேதி வரை லேசான மழை

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் 24ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவினாலும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 102 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், ஈரோடு, திருச்சி 100 டிகிரி, தஞ்சாவூர், திருத்தணி, சேலம், தர்மபுரி, பாளையங்கோட்டை, 99 டிகிரி, திருப்பத்தூர், சென்னை, கோவை, நாகப்பட்டினம் 97 டிகிரி வெயில் நிலவியது. இதுதவிர வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளில் 100 டிகிரியும், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரியும், தமிழக கடலோரப் பகுதிகளில் 97 டிகிரியும் வெயில் நிலவியது.

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் 24ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். 20ம் தேதி வரை அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகமாக இருக்கும் நிலையில் ஒரு சில பகுதிகளி்ல் அசவுகரியம் ஏற்படலாம்.

The post 24ம் தேதி வரை லேசான மழை appeared first on Dinakaran.

Related Stories: