பழநி: பழநி கல்லூரியில் மாணவர்களை நாற்காலியால் தாக்க முயற்சித்த வகுப்பறைக்குள் ஸ்கூட்டர் ஓட்டி அட்ராசிட்டி செய்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் சுயநிதிப்பிரிவில் வணிகவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கவுதம் (47). இவர் வகுப்பறையில் சில மாணவர்களை நாற்காலியை கொண்டு தாக்க முயற்சிப்பதும், மாணவர்கள் சிலர் வகுப்பறையை விட்டு வெளியே ஓடுவது போலவும், சில மாணவர்கள் சிரிப்பது போன்றும், டூவீலரில் பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைவது போன்ற காட்சிகள் வீடியோ தற்போது போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து கல்லூரி செயலர் வெங்கடேஷிடம் கேட்டபோது புகாருக்கான பேராசிரியர் கவுதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
The post மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்று வகுப்பறைக்குள் ஸ்கூட்டர் ஓட்டி கல்லூரி பேராசிரியர் அட்ராசிட்டி: அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.