இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜீவகுமாரி, இன்பலட்சுமி, தனசிங்க பெருமாள் ஆகிய மூவரும் மயங்கிக் கிடந்தனர். மகன், மகளுக்கு விஷம் கொடுத்து, ஜீவகுமாரியும் விஷமருந்தி இருந்தது தெரிந்தது. வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஜீவகுமாரி, இன்பலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்தனர். மகன் தனசிங்கபெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். இதன்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தாய், மகள் தற்கொலைக்கு குடும்ப வறுமை காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுரையில் வறுமையால் விபரீதம் குடும்பமே விஷம் குடிப்பு தாய், மகள் பரிதாப பலி: மகன் கவலைக்கிடம் appeared first on Dinakaran.