ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: 35வது லீக் போட்டியில் எதற்கும் அசராத குஜராத் கில்லியாய் நிற்கும் டெல்லி

* ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் 35வது லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
* இது, இந்த 2 அணிகளுக்கும் 6வது ஐபிஎல் போட்டி.
* இதற்கு முன் இந்த 2 அணிகளும் மோதிய 5 போட்டிகளில் டெல்லி 3, குஜராத் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக டெல்லி 224, குஜராத் 220 ரன் வெளுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக டெல்லி 92, குஜராத் 89 ரன் எடுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 3 போட்டிகளிலும் டெல்லிேய வெற்றி வாகை சூடியுள்ளது.
* மற்ற அணிகளுடன், இந்த அணிகள் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளன.
* நடப்புத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் பஞ்சாபிடமும், கடைசி போட்டியில் லக்னோவிடமும் தோல்வியை சந்தித்தது.
* இடையில் 4 போட்டிகளில் மும்பை, பெங்களூர், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளது.
* அதேபோல் அக்சர் படேல் தலைமையிலான டெல்லியும் 6 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் முதல் 4 போட்டிகளில் லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூர் அணிகளை நொறுக்கியது. அடுத்து 5வது ஆட்டத்தில் மும்பையிடம் மண்டியிட்டது. ராஜஸ்தானுடன் நடந்த 6வது லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது டெல்லி.
* ஆக குஜராத் 4-2, டெல்லி 5-1 என்ற கணக்கில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன.
* புள்ளிப் பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும், குஜராத் 2வது இடத்திலும் உள்ளன.
* அகமதாபாத்தில் இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 2 போட்டிகளிலும் டெல்லிதான் வென்றுள்ளது.

36வது லீக் போட்டியில் ராசியில்லாத ராஜஸ்தான் சூப்பர் லக்குடன் லக்னோ
* ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் 36வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும்.
* ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் ராஜஸ்தான் 4, லக்னோ ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிபட்சமாக 199ரன்னை ராஜஸ்தானும், 196ரன்னை லக்னோவும் விளாசி இருக்கின்றன.
* குறைந்தபட்சமாக லக்னோ 154, ராஜஸ்தான் 144 ரன் அடித்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 3 போட்டிகளில் ராஜஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* மற்ற அணிகளுடன் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் ராஜஸ்தான் 2-3, லக்னோ 3-2 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை ருசித்துள்ளன.
* இதுவரை நடந்த போட்டிகளில் ரியான் பராக் (3 போட்டிகள்), சஞ்சு சாம்சன் (4போட்டிகள்) தலைமையில் ராஜஸ்தான் 7 லீக் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அவற்றில் ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூர், டெல்லி (சூப்பர் ஓவர்) ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இடையில் சென்னை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தி ஆறுதலாக 2 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளது.
* ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னா அணியும் இதுவரை 7 லீக் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அவற்றில் டெல்லி, பஞ்சாப், சென்னை அணிகளிடம் 3 தோல்வியையும், ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் 4 வெற்றியையும் பெற்றுள்ளது.
* இந்த 2 அணிகளுக்கும் இடையே இன்று நடப்பது, 8வது லீக் போட்டி.
* பழைய வரலாறு ராஜஸ்தானுக்கும், நடப்புத் தொடரின் வரலாறு லக்னோவுக்கு சாதகமாக இருக்கின்றன.
* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் ஒரே ஒரு லீக் போட்டியில் மட்டுமே மோதுகின்றன.
* ஜெய்ப்பூரில் இந்த 2 அணிகளும் இதுவரை 2 முறை மட்டுமே மோதி இருக்கின்றன. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

* 575 பந்துகளில் 1000 ரன் டிராவிஸ் ஹெட் சாதனை
ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன் குவித்த 2வது அதிடிர வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹெட், 29 பந்துகளில் 28 ரன் எடுத்தார். இதன் மூலம், 1000 ரன்களை அவர் கடந்ததோடு, மிகக் குறைந்த பந்துகளில் 1000 ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், ஆண்ட்ரே ரஸல், 545 பந்துகளில் 1000 ரன் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன் குவித்த வீரர்களின் பட்டியல்:
ஆண்ட்ரே ரஸல் 545 பந்து
டிராவிஸ் ஹெட் 575 பந்து
ஹென்ரிச் கிளாசன் 594 பந்து
வீரேந்தர் ஷேவாக் 604 பந்து
கிளென் மேக்ஸ்வலெ் 610 பந்து
கிறிஸ் கெயில் 615 பந்து
யூசுப் பதான் 617 பந்து
சுனில் நரைன் 617 பந்து

The post ஐபிஎல்லில் இன்று 2 போட்டிகள்: 35வது லீக் போட்டியில் எதற்கும் அசராத குஜராத் கில்லியாய் நிற்கும் டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: