இதனால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். ஒரு பாம்பு அவரை கொத்தி கொண்டிருந்ததை கண்டு பீதியடைந்தனர். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். பிரேதபரிசோதனையில், அமித் உடலை பாம்பு 10 முறை கடித்திருப்பதும், ஆனால் பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித்தின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை முடிவை வைத்து ரவிதாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக ரவிதா நாடகம் ஆடியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அமித்தின் நண்பரான அமர்தீப்புக்கும் ரவிதாவுக்கும் ஓராண்டாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு முறை ரவிதாவும் அமர்தீப்புக்கும் தனிமையில் இருந்ததை அமித் பார்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 12ம் தேதி இரவு அமித் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர். மேலும் கொலையை இயற்கை மரணமாக மாற்ற ரூ.1000 கொடுத்து பாம்பை வாங்கி வந்து, அதை அமித்தின் உடல் மீது விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அழுது கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க முயற்சித்தார் ரவிதா. போலீசார் விசாரித்தபோது, ‘பாம்புகள் பொதுவாக மனிதரை ஒரு முறை கொத்தினால் அந்த இடத்திலிருந்து உடனே சென்றுவிடும்’ என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அமித்தின் உடல் மீது பாம்பு இருந்துள்ளது. மேலும் அமித்தை 10 முறை பாம்பு கடித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரேத பரிசோதனையும் போலீசார் சந்தேகித்தபடியே வந்ததால் ரவிதாவை கைது செய்தனர்.
* புதுமாப்பிள்ளையை கொன்றுவிட்டு சடலத்தை காதலனுக்கு வீடியோ காலில் காட்டிய மனைவி
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்த ராகுல் (25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் அந்த பெண், யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 13ம் தேதி ராகுலுடன் பைக்கில் சென்றபோது, தனது செருப்பு கழன்றுவிட்டதாக கூறி மனைவி பைக்கை நிறுத்த கூறியுள்ளார். உடனே ராகுலும் பைக்கை நிறுத்தினார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் ஓடி வந்து, ராகுலை பீர் பாட்டிலால் சுமார் 36 முறை குத்தி கொலை செய்தனர். அதன் பிறகு, அவரது மனைவி, தனது கள்ளக்காதலன் யுவராஜுக்கு வீடியோ காலில் பேசி ராகுலின் சடலத்தை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை வயல் பகுதியில் வீசிவிட்டு 3 பேரும் தப்பி சென்றனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் யுவராஜின் நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
The post கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பாம்பு கடித்து கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது: உ.பியில் பரபரப்பு appeared first on Dinakaran.