வீட்டுக்குள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியை கைப்பற்றிய அதிகாரிகள் அந்த வீட்டில் வசித்து வந்த கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அங்கு தங்கியிருந்த ஒன்றிய உதவி கணக்கு தணிக்கை அதிகாரியான ஜிதின் என்பவர் தான் கஞ்சா செடியை வளர்த்தார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கலால்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒன்றிய அரசு உயரதிகாரியின் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த ஒன்றிய அரசு அதிகாரி கைது: கலால் துறை நடவடிக்கை appeared first on Dinakaran.