தொழிலாளியை கல்லால் தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே

ஆரணி, ஏப். 18: ஆரணி அடுத்த அரையாளம் காலனி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ்(41), இவர், சென்னையில் ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிவராஜ் தனது சொந்த ஊரான அரையாளம் கிராமத்திற்கு வந்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது, சிவராஜின் அண்ணன் மகன் தமிழ் என்பவர் ஊர்வலத்தில் நடனமாடி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் அவரை பிடித்து கீழே தள்ளி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் சிவராஜ் எதற்காக எனது அண்ணன் மகனை கீழே தள்ளி விட்டாய் என நந்தகுமாரை தட்டி கேட்டுள்ளார். இதனால், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நந்தகுமார் அவரது நண்பர் வாஞ்சிநாதன் இருவரும் சேர்ந்து சிவராஜ்யை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளாராம். தொடர்ந்து, அருகில் இருந்த செங்கலை எடுத்து சிவராஜ் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்து இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில்,படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சிவராஜ் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாஞ்சிநாதன், நந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

The post தொழிலாளியை கல்லால் தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே appeared first on Dinakaran.

Related Stories: