உலக அளவில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக ஐபிஎல் உள்ளது. இந்த தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஒரு தொழில் அதிபர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக இந்த குழு எச்சரித்துள்ளது.ஏற்கனவே, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post ஐபிஎல்லில் மாட்ச் பிக்சிங்கா? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை appeared first on Dinakaran.