சிறுமிகள் முன்பு நிர்வாண போஸ்: வாலிபர் கைதுசிறுமிகள் முன்பு நிர்வாண போஸ்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: திருச்சூரில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சில சிறுமிகள் சேர்ந்து வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா? என்று சிறுமிகளிடம் கேட்டுள்ளார்.

பின்னர் தான், வாடகை வீடு தேடிவந்ததாக கூறிய வாலிபர் திடீரென சிறுமிகள் முன்பு நிர்வாண போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருச்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்ததில் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் திருச்சூர் அருகே உள்ள கோடாலி பகுதியைச் சேர்ந்த கோகுல் (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கோகுல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிகள் முன்பு நிர்வாண போஸ்: வாலிபர் கைதுசிறுமிகள் முன்பு நிர்வாண போஸ்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: