கரூர், ராயனூர் பகுதியில் அரசு வங்கி, ஏடிஎம்.கள் அமைக்க கோரிக்ைக

கரூர், ஏப். 17: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏடிஎம்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாந்தோணிமலைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் பகுதியாக ராயனூர் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அதிகளவு உள்ளன. மேலும், கரூரில் இருந்து திண்டுக்கல், பாகநத்தம், ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனு£ர் வழியாகவே சென்று வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையமும் ராயனூர் பகுதியில்தான் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தளவுக்கு கருர் மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராயனூர் உள்ளது.

ஆனால், இந்த சாலையின் வழியாக அதிகளவு பேருந்து வசதிகள் குறைவாக உள்ளதோடு, ஒரு சில தனியார் நிறுவன ஏடிஎம்களே உள்ளன. அரசுடைமையாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏடிஎம்கள் இந்த பகுதியில் இல்லை. இதன் காரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அனைவரும் பல்வேறு சேவைகளுக்காக தாந்தோணிமலை, கரூர், காந்திகிராமம் போன்ற பகுதிகளுக்குதான் சென்று வருகின்றனர். எனவே, கரூர் மாநகர பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வரும் ராயனூர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏடிஎம் சேவையை கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு வங்கிகள் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கரூர், ராயனூர் பகுதியில் அரசு வங்கி, ஏடிஎம்.கள் அமைக்க கோரிக்ைக appeared first on Dinakaran.

Related Stories: