ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை தென்கடல் பகுதியில் நேற்று முன்தினம் பகல் முதல் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. மாலையில் அலைகள் சீற்றம் ஏற்பட்டு பாறைகளின் தடுப்புகளில் சீறிப்பாய்ந்தன. இதனால் அரிச்சல்முனை முன்பு சாலையோரம், சில இடங்களில் கடல்நீர் தேங்கி சிறு கற்கள் சிதறி கிடந்தன. எம்.ஆர்.சத்திரம் ஜெட்டி பாலத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதி சீறிப்பாய்ந்தன. கடல் பெருக்கு காரணமாக அரிச்சல்முனை ரவுண்டானா தென்பகுதி மணல் பரப்புகளில் கடல்நீர் சூழ்ந்தது.
தென் கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி பூர்வகுடி மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லாமல் வடகடலுக்குச் சென்றனர். இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று முன்தினம் சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. நேற்று காலையும் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது.
The post தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: திருச்செந்தூரில் உள்வாங்கியது appeared first on Dinakaran.