ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெண்ணாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசுகையில், “இந்தாண்டு மிக விரைவாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு அரசு முன்வருமா‘‘ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், ‘‘ஜல் ஜீவன் திட்டத்திலே ஒன்றிய அரசிலிருந்து கிடைக்கக்கூடிய நிதியும், மாநில அரசினுடைய பங்காக இருக்கிற நிதியும் இரண்டுமே அதற்காக கொடுக்கப்பட்டுவிட்டது. 8 ஆயிரம் கோடி ரூபாய் ஜெய்காவிலே கடன் கேட்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சில நிபந்தனைகள் போட்டிருக்கிறார்கள். ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் ஒப்புதல் தருவதாக ெஜய்கா நிறுவனத்திலே செல்லியிருக்கிறார்கள்.

எனவே, கடன் தருகிறவர்கள் அவர்களுடைய முன்னுரிமை என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். இவ்வளவு நாட்கள், மக்கள்தொகை என்றெல்லாம் கணக்கு பார்க்கிறார்கள். அந்தப் பணிக்கு ஜூன் மாதம் 25ம் தேதிக்குள் கையெழுத்து போட்டு தந்துவிடுவோம் என்று உறுதி கொடுத்துள்ளார்கள். ஜூன் அல்லது ஜூலைக்குள் அது டெண்டருக்கு வந்துவிடும். நிச்சயமாக முதல்வர் அறிவித்த திட்டம் உறுதியாக அது நிறைவேற்றப்படும். அதுவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் அந்த குடிதண்ணீர் செல்லும்போது மிகச் சிறப்பாக அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும்” என்றார்.

The post ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2ம் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: