தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்


சட்டப்பேரவையில் செய்தி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் (திமுக) பேசியதாவது: தமிழ் மொழிக்காக போராடி சிறை சென்ற தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவப் படியுடன் ஐந்தாயிரம் வழங்கப்படுகிறது, அவருடைய வாரிசுக்கு மூன்றாயிரம் வழங்கப்படுகிறது. அந்தத் தொகை குறைவாக உள்ளது. எனவே, அந்தத் தொகையினை உயர்த்தித் தர ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் வைக்க வேண்டுமென்று தொடர்ந்து நம்முடைய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

ஆனால், இதுவரை அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, உடனடியாக அரசு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். உலகம் முழுக்க எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் உலகத் தமிழ் நூலகம் ஒன்றை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: