சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாளையங் கோட்டை தனியார் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கை என்றால் அரிவாள் எப்படி கிடைத்தது, அதனை பயன்படுத்தும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது உள்ளிட்ட பலவற்றை விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவம் சம்பந்தமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பள்ளிகல்வித் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்: வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.