தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.400 குறைந்தது


சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து உயர்ந்து வந்தது. 9ம் தேதி பவுனுக்கு ரூ.1,480, 10ம் தேதி ரூ.1,200, 11ம் தேதி ரூ.1,480 என உயர்ந்தது. 12ம் தேதி பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,160 என்ற வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,360 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.70,040க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,720க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.69,760க்கும் விற்பனையானது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.400 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: