சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் போதைபொருள் வழக்கில் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 7 நபர்கள் உட்பட 17 குற்றவாளிகள் மற்றும் IPL கிரிக்கெட் போட்டியின் போது செல்போன் திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த தின்பஹார் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
* திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் நைஜிரியா நாட்டைச்சேர்ந்த 7 நபர்கள் உட்பட 17 நபர்கள் கைது.
சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் அருள்மணி, ராஜேஸ்வரன், தலைமைக் காவலர்கள் ஷானவாஸ் (த.கா.24068), காளிராஜ் (த.கா.31148), முதல்நிலைக் காவலர்கள், முத்து (மு..நி.கா.44653), திரு.பாலசுப்ரமணியன் (மு.நி.கா.44989), திரு.மதுரைவீரன் (மு.நி.கா.63806), திரு.ரமேஷ் (மு.நி.கா.51144), திரு.முருகபெருமாள் (மு.நி.கா.58165), காவலர்கள் திரு.பிரபு (கா.49550), திரு.அய்யப்பன் (கா.52653), திரு.அழகுமுத்து (கா.49358), திரு.கோகுலகிருஷ்ணன் (கா.63874), திருவல்லிக்கேணி சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.விமல்குமார் மற்றும் தலைமைக் காவலர் திரு.ரதீஷ்குமார் (த.கா.38006) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர்,
D-2 அண்ணாசாலை காவல் நிலைய போதைப்பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 1.முகமது சொகைல், வ/24, 2.விக்னேஷ்வரன் வ/24, 3.யுவராஜ், வ/25, 4.பிரவின், வ/31, 5.பாலசந்தர், வ/28 ஆகியோரை 09.03.2025 அன்றும் 6.நிக்கில் என்பவரை 21.03.2025 அன்றும், 7.Christoper Oluchukwa, 8.Samir Salah Nouraldeen, 9.Etim Antigha, 10.Effiong Etim, 11.Sheu Adeleke ஆகிய வெளிநாட்டினரை 09.04.2025 அன்றும் என மொத்தம் 11 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 29 கிராம் மெத்தபெட்டமைன், 5.3 கிராம் ஓஜி கஞ்சா, 250 கிராம் கஞ்சா, 2.6 கிராம் MDMA மாத்திரைகள், 4 லேப்டாப்கள், பணம் ரூ.1,71,100/- மற்றும் 4 எடை இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது.
இதே போல, மேற்கண்ட திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினர் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய போதைப்பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சையத் அக்சன், 2.தீபக் அந்தோணி ராஜ் ஆகிய இருவரை 03.04.2025 அன்றும், 3.கிரன் பனிக்கர் என்பவரை 08.04.2025 அன்றும், 4.Chigemezel Nwune, 5.Ogoegbunem 6.Benard Oknkwo Juel ஆகியோரை 09.04.2025 அன்றும் என மொத்தம் 6 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 8.5 கிராம் மெத்தபெட்டமைன், 2 கிராம் ஹெராயின், 300 கிராம் கஞ்சா, பணம் ரூ.7,500 மற்றும் 1 எடை இயந்திரம் கைப்பற்றப்பட்டது.
திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினர் கடந்த ஒரு மாதத்தில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பான 2 வழக்குகளில் நைஜிரியா நாட்டை சேர்ந்த 7 நபர்கள், சூடான் நாட்டை சேர்ந்த ஒரு நபர், பெங்களூரைச் சேர்ந்த 2 நபர்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 நபர்கள் என மொத்தம் 17 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 37.5 கிராம் மெத்தபெட்டமைன், 2 கிராம் ஹெராயின், 5.3 கிராம், ஓஜி கஞ்சா, 550 கிராம் கஞ்சா, 2.6 கிராம், MDMA மாத்திரை, பணம் ரூ.1,78,600 /-, 4 லேப்டாப் மற்றும் 5 எடை இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது.
* சென்னை சிங்கம் IPL QR குறியீடு மூலம் புகார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தின்பஹார் கும்பல் கைது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 23.03.2025 அன்று முதல் IPL கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காண வரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை இச்செயலி மூலம் கிடைக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அறவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 23.03.2025 அன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை காண வந்த பொதுமக்களின் செல்போன்கள் திருடு போனதாக பாதிக்கப்பட்ட நபர்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை சிங்கம் IPL QR குறியீடு மூலம் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.கணேஷ்பாபு, திரு.பால்ராஜ், திரு.வினோத்குமார், தலைமைக் காவலர்கள் திரு.சிவகுமார் (த.கா.31833), திரு.மணிமுத்து (த.கா.31348), முதல்நிலைக் காவலர் திரு.சுரேஷ்குமார் (மு.நி.கா.50903), காவலர்கள் திரு.ராஜபாண்டி (கா.61505), திரு.லோகேஷ் (கா.50268), திரு.வினோத்குமார் (கா.61397), திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.விமல்குமார், பெண் தலைமைக் காவலர் திருமதி.ஷீஜாராணி (பெ.த.கா.37268), தலைமைக் காவலர் திரு.ரதீஷ்குமார் (த.கா.38006) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் துரித விசாரணை மேற்கொண்டு, மேற்படி செல்போன்களை திருடிய ஜார்கண்ட், தின்பஹார் கும்பலைச் சேர்ந்த 10 நபர்களை கைது செய்தும், 1 இளஞ்சிறாரை விசாரணை செய்தும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 74 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் திறமையாக செயல்பட்டு, போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நைஜிரியா நாட்டைச்சேர்ந்த 7 நபர்கள் உட்பட 17 நபர்களை கைது செய்த திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் அவர்களின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினர், கிரிக்கெட் மைதானம் அருகே பொதுமக்களின் செல்போன்களை திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த தின்பஹார் கும்பலை கைது செய்து, 74 செல்போன்களை மீட்ட D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் தலைமையிலான காவல் குழுவினர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று (15.04.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் திரு.விஜயேந்திர பிதாரி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் திரு.D.N.ஹரிகிரண் பிரசாத், இ.கா.ப, (தலைமையிடம்), திரு.G.சுப்புலட்சுமி (நிர்வாகம்) காவல் அதிகரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
The post IPL கிரிக்கெட் போட்டியின் போது செல்போன் திருடிய ஜார்கண்ட் தின்பஹார் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். appeared first on Dinakaran.