அமெரிக்க பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 9 பேர் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவின் ஆர்கன்சஸ் பகுதியில் லிட்டில் ராக் அருகில் மிக பெரிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, பெரிய விளையாட்டு மைதானம், கூடைப்பந்து ஆடுகளம் உள்ளது. நேற்றிரவு வழக்கம் போல பூங்காவில் ஏராளமானோர் இருந்தனர். அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் பூங்காவுக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமாக உள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு எதனால் நடந்தது, துப்பாக்கியால் சுட்டது யார் என்பது போன்ற விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். முதல்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், முழு விவரங்கள் பின்னரே தெரிய வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

The post அமெரிக்க பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: