தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு..!!

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம், தாம்பரம் – நாகர்கோவில், தாம்பரம் – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் – நெல்லை ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; நாகர்கோவில் – தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06012) மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கூடுதலாக 4 வாரம் இயக்கப்படும். இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாரந்தோறும் திங்கட்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06011) மே 12ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

இதேபோல், தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு இடையே வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06035) மே 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. இதேபோல், திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06036) மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06030) மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06029) மே 12ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை மேலும் 4 வாரம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: