இந்நிலையில் ஜாய் சைனி தனது கணவர், மகள், மகன் மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நியூயார்க்கின் கேட்ஸ்கில்ஸ் மலைப்பகுதிக்கு தனி விமானத்தில் சென்றார். விமானத்தை மைக்கேல் கிராப் ஓட்டினார். கடந்த 12ம் தேதி கொலம்பியா கவுன்டி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் 16 கிமீ தொலைவுக்கு முன்பாக கோபகே பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஜாய் சைனி உட்பட 6 பேரும் பலியாகினர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்லாததால் சைனியின் மற்றொரு மகள் அனிகா தப்பி உள்ளார்.
The post அமெரிக்காவில் விமான விபத்து இந்திய பெண் மருத்துவர் குடும்பத்தினருடன் பலி: பிறந்தநாளை கொண்டாட சென்ற இடத்தில் சோகம் appeared first on Dinakaran.