இதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ. 500க்கும், ஐஸ் மல்லி ரூ. 300 இருந்து ரூ. 400க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.300 இருந்து ரூ. 400க்கும், கனகாம்பரம் ரூ.500 இருந்து ரூ. 800க்கும், சாமந்தி ரூ. 180 இருந்து ரூ. 240க்கும், சம்பங்கி ரூ. 150 இருந்து ரூ. 200க்கும், அரளி பூ ரூ.300 இருந்து ரூ.500க்கும், சாக்லேட் ரோஸ் ரூ. 120 இருந்து ரூ. 180க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 100 இருந்து ரூ. 140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’தமிழ் வருடப் பிறப்பு புத்தாண்டு முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் கனகாம்பரம் சாமந்தி, சம்பங்கி, அரளி பூ, சாக்லேட் ரோஸ், பன்னீர் ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக மல்லி, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லை பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது என்றார்.
The post தமிழ் வருடப் பிறப்பு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை இரு மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.
