மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களை பறைசாற்றும் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்! அவ்வகையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த அனைத்தும் சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களை பறைசாற்றும் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: